வீடொன்றின் மீது அதிகாலை வேளையில் துப்பாக்கிச் சூடு
மீகொடை – படவல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை அடையாளந் தெரியாத ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த வீட்டின் மீது 4 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை, என தெரிவிக்கப்படுகின்றது
வீட்டின் உரிமையாளரை அச்சுறுத்துவதற்காகவே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்