விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

நேற்று சனிக்கிழமை சித்தங்கேணியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டையில் இருந்து சித்தங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், சித்தங்கேணியில் இருந்து வட்டுக்கோட்டை பக்கமாக சென்ற சைக்கிளும் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் விபத்திற்குள்ளான இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டையை சேர்ந்த நாகராசா சிறீஸ்குமார் (வயது 42) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.