விபத்தில் இளைஞன் உயிரிழப்பு ; ஒருவர் காயம்

கலென்பிந்துனுவெவ – கெட்டலாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராஜாங்கனை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் அதன் கட்டுபாட்டை இழந்ததால், வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த சுவரில் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக கலன்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதனையடுத்து, சிகிச்சை பெற்றுவந்ததில் ஒருவர் உயிரிந்ததுடன் காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.