விக்னேஸ்வரன் கூட்டணியில் இணைந்தாரா மணிவண்ணன்?
-யாழ் நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி. வி. விக்னேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.
‘கல்விக்கு கரம் கொடுப்போம், பெண் தலைமைத்துவத்தை ஊக்குவிப்போம்’
எனும் தொனிப்பொருளில் இன்று சனிக்கிழமை வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடிப் பிரதேசத்தில் உள்ள சீனிப்போடியார் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறப்பினருமாகிய க.வி.விக்கினேஸ்வரன் , கௌரவ விருந்தினராக, யாழ். மாநகர முதல்வரும் சட்டத்தரணியுமாகிய விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் செங்கலடிப் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.