வாவியில் மூழ்கி சிறுவன் பலி
எம்பிலிபிட்டி – சந்திரிக்கா வாவியில் மூழ்கி ஒன்பது வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன் தமது தாய் உள்ளிட்ட இருவருடன் சந்திரிக்கா வாவியில் நீராடச் சென்றபோதே நீரில் மூழ்கியதையடுத்து பொலிஸ் உயிர்காப்பு உத்தியோகத்தர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக எம்பிலிபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.