வாழைச்சேனை கமநலசேவை நிலையத்தில் சேவை நலன் பாராட்டு விழா

-வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு வாழைச்சேனை கமநலசேவை நிலையத்தில் சேவை நலன் பாராட்டு விழா கமநலகேந்திர நிலையத் தலைவர் க.நடேசன் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிலையத்தில் பெரும்பாக உத்தியோகத்தராக கடமையாற்றிய எம்.ஏ.ரசீட் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளமையை அடுத்து அவர் பிரதேச விவசாயிகளுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி கௌரவிக்கும் முகமாக இவ் சேவை நலன் பாராட்டு கமநல அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அவர் ஆற்றிய சேவை தொடர்பாக நினைவு கூறப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு வாழ்த்து மடல் மற்றும் நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு கமநல கேந்திர உதவி ஆணையாளர் கே.ஜெகநாத், வாகநேரி திட்ட முகாமையாளர் எம்.தீபக்காந், வாழைச்சேனை பெரும்பாக உத்தியோகஸ்த்தர் கே.ஜெயக்காந்தன், வாகநேரி நிர்பாசன திட்ட முகாமைத்துவ தலைவர் சி.புஸ்பாகரன் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.