வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞன் பலி

-யாழ் நிருபர்-

வவுனியா ஓமந்தை பகுதியில் புகையிரதம் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.