வலம்புரி சங்குடன் ஒருவர் கைது
-பதுளை நிருபர்-
விசேட அதிரடிப்படையினரால் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது
கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொறக்காப்பத்தன பகுதியில் வைத்து இன்று புதன்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் வலம்புரி சங்குடன் ஒருவர் நுவரெலியா விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சில்மியாபுர பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்கும் கெப்பட்டிபொல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொறக்காப்பத்தன பகுதியில் நுவரெலியா விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபரிடமிருந்து 11.6 அங்குல நீளமும் 14 அங்குல சுற்றளவும் 500 கிராம் எடையும் கொண்ட வெள்ளை, மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் டைட்டானியம் வகையைச் சேர்ந்த வலம்புரி சங்கு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக கெப்பட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்