நாடளாவிய ரீதியில் கடந்த (மே) மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக , பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 15 சந்தேக நபர்கள் நீர்கொழும்பு மற்றும் 17 சந்தேக நபர்கள் பொலன்னறுவையைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
- Advertisement -
இதே சம்பவம் தொடர்பில் கம்பஹாவைச் சேர்ந்த 09 சந்தேக நபர்களும், அனுராதபுரத்தைச் சேர்ந்த 04 சந்தேக நபர்களும் இன்று சனிக்கிழமை கைது செய்யப்படடுள்ளனர்.
இதேவேளை, சமூக வலைத்தளங்கள் ஊடாக வன்முறைகளை தூண்டிய குற்றச்சாட்டில் இதுவரை 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
- Advertisement -