
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு
-யாழ் நிருபர்-
வன்னி ஹோப் நிதி அனுசரணையில், பிரைட் சமூக அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு, வன்னி ஹோப் நிறுவனத்தின் பனிப்பாளர்களான கந்தகுமார் மற்றும் பணிப்பாளர் மாலதி வரன் ஆகியோரால் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு பற்றாக்குறையாக இருந்த சுமார் தொன்நூறாயிரம் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக இவ் பிரதேசத்தில் உள்ள சுமார் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் நன்மையடைய கூடியதாக உள்ளது.
இந் நிகழ்வில் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்களான காந்தநேசன், பி.என்.ரொபின்ஸன், பிறைட் சமூக அபிவிருத்தி அறக்கட்டளைின் தலைவர் என்.முரளிதரன், வன்னி ஹோப் நிறுவனத்தின் இணைப்பாளர் கிருஸ்ணமுகன் பிறைட் சமூக அபிவிருத்தி அறக்கட்டளைின் உத்தியோகத்தர்கள், வட்டுக்கோட்டை சமூகத்தினர் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.