வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா – அமெரிக்க தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜியூன் சங் இன்று திங்கட்கிழமை  வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பல்வேறு தரப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று காலை வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினார்.