வடக்கு கிழக்கு இணைய அயல்நாடான இந்தியாவே உதவ வேண்டும்

-கிளிநொச்சி நிருபர்-

வருகின்ற மே 1 ம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் மாபெரும் எழுச்சி பேரணி ஒன்று ஊர்வலமாக சென்று எமது நிலையை அரசுக்கு உணர்த்த வேண்டும் என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் இருந்து பசுமை பூங்கா வரை செல்லவுள்ள குறித்த பேரணியில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் மலையகத்தில் தேயிலை பறிக்கும் தொழிலாளிகளின் சம்பளப்பிரச்சனை, விவசாயம் தொடர்பான பிரச்சனைகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனைகள் மற்றும் எமது நாட்டில் வடக்கு கிழக்கு இணைய வேண்டும் என்ற பிரச்சனை அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ஏற்றம் சம்பந்தமாகவும், இப்படி தொழிலாளர்கள் படுகின்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றே குறித்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு இணைவதற்கு அயல்நாடான இந்தியாவே உதவி புரிய வேண்டும் எனவும் 1987ஆம் ஆண்டு ஒப்பந்தத்தையே நிறைவு செய்ய முடியாத நாடாக இந்திய இருந்து வருவதாகவும் உங்கள் தொப்புள் கொடி உறவுகளாகிய எமக்கு வடக்கு கிழக்கு இணைய உதவி புரியமாறு, கேட்டு கொண்டிருந்தார்.