
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பாணை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்பு!
ஏப்ரல் 17 ஆம் திகதி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, அவர் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை காலத்தில், தானும் தனது சட்டக் குழுவும் கொழும்பில் இல்லாதபோது, இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதனால் புதிய திகதியை அவர் கோரியுள்ளார்.