ரயிலில் மோதி பெண் பலி

பாணந்துறை மற்றும் எகொடஉயன ரயில் நிலையங்களுக்கு இடையில் மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த 716 இலக்க ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் 60 வயது மதிக்கத்தக்கவர் எனவும் அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரயில் பாதையை கவனக்குறைவாக கடக்கும் போதே குறித்த பெண் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்