யாழ்.தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம்

-யாழ் நிருபர்-

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று திங்கட்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

அதிகாலை 4.30 மணியளவில் ஆரம்பமான கொடித்தம்ப பூசையைத் தொடர்ந்து 09.00 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்றது.

வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து துர்க்கையம்பாள் சமேதராக உள்வீதி ஊடாக வலம் வந்து, வெளிவீதியில் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.

பெருந்திரளான பக்தர்களுடன் இடம்பெற்ற திருவிழாவைத் தொடர்ந்து, வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா 29.08.2023 அன்று நடைபெற்று, மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்.

இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்து பக்தர்கள் கலந்துகொண்டனர்.