யாழில் 17 வயது சிறுமி உயிரிழப்பு : இரு பொலிஸ் குழுக்கள் களத்தில்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை நடாத்த இரண்டு பொலிஸ் அணிகள் களமிறக்கம்

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் 17 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரினால் இரண்டு பொலிஸ் அணிகள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான இரண்டு அணிகள் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்.  விசாரணையின் பின்னர் உரிய சட்ட நடவடிக்கை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

தொடர்புடைய  செய்திகள் :

மன அழுத்தத்தால் தவறான முடிவெடுத்த சிறுமி

யாழில் உயிரிழந்த 17 வயது சிறுமி : கொலை என சந்தேகம்

வீட்டுவேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுமி உயிரிழப்பு: உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்