யாழில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு

-யாழ் நிருபர்-

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் குடியேற்ற திட்டம் பகுதியில் சக்தி வாய்ந்த மூன்று மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.