
யாழில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய பொலிஸார்
-யாழ் நிருபர்-
ஜே.வி.பி கட்சியின் யாழ். அலுவலகத்தில் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள சகல ஊடகவியலாளர்களும் வருகை தந்தபோது குறித்த இடத்தைச் சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அலுவலகத்திற்கு முன்னால் நிறுத்தப் பட்டிருந்த ஊடகவியலாளர்களின் மோட்டார் சைக்கிள்களை அலுவலகத்திற்குள்ளே நிறுத்துமாறு காவல்துறையினர் அச்சுறுத்தி ஊடகவியலாளர்களை வீதியில் பயணிக்க முடியாது எனத் தெரிவத்துள்ளனர்.
அத்துடன் ஊடகவியலாளர்கள் ஊரடங்கு வேளையில் வீதியில் பயணிக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்து கைத்தொலைபேசிகளில் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தியுள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன, ஊரடங்கு வேளையில் அத்தியாவசிய தேவைகள் மற்றும் ஏனைய அன்றாட தேவைகளை கருதி வீதியில் பயணிப்போர் தமக்குரிய அலுவலக அடையாள அட்டையினை பயன்படுத்தி வீதிகளில் பயணிக்க முடியும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினரால் ஊடகவியலாளர் மீது நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் அனைவரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
