கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு யானை மரணங்கள் அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 25  வரை 114 யானைகள் இறந்துள்ளன.

துப்பாக்கி சூடு,  மின்சாரம் தாக்கி, பட்டாசு வெடித்து 67 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கையில், 

2022 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் மனித தலையீடு காரணமாக காட்டு யானை மரணங்களின் எண்ணிக்கை நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் அதிக யானை மரணங்கள் அனுராதபுரம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளன, இதுவரை 34 இறப்புகள் பதிவாகியுள்ளன.

பொலன்னறுவை மாவட்டத்தில் 29 காட்டு யானைகளும், கிழக்கு மாகாணத்தில் 19 காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேவேளை யானைகள் மோதலில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்