மே 21இல் அவுஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல்

அவுஸ்திரேலியாவில் மே 21ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் கூறியுள்ளார்.

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம், பருவநிலை மாற்றம், முக்கியக் கட்சிகளின் தன்மையும் திறனும் பற்றிய கேள்விகள் ஆகியவை குறித்த விவாதங்கள் பிரசாரத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9 ஆண்டுகால ஆட்சிக்குப்பின்னர் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியை விட மோரிசனின் பழைமைவாதக் கூட்டணி பின்தங்கி இருப்பதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. மே 2019இல் நடந்த தேர்தலுக்கு முன்னர் இதேபோன்ற கருத்துக்கணிப்புகளில் மொரிசன் பின்தங்கினார். இருப்பினும் அதில் அவர் வெற்றிபெற்றார்.

தேர்தல் குறித்து நிச்சயமற்ற நிலைமை இருந்தாலும் இந்தத் தேர்தலும் பிரசாரமும் மிகவும் முக்கியமானவை என்று மொரிசன் குறிப்பிட்டார். முன்னாள் பிரதமர் ஜோன் ஹோவர்டுக்கு பின் எந்த பிரதமரும் தொடர்ந்து இருமுறை தேர்தலில் வெற்றி பெற்றதில்லை என்ற நிலையில் பிரதமர் ஸ்கொட் மொரிசன் இந்த தேர்தலை எதிர்கொள்கிறார்.