மூதாட்டி ஒருவரை காணவில்லை : கண்டால் அறிவிக்கும்படி வேண்டுகோள்

-யாழ் நிருபர்-

யாழ் – கொக்குவில் பகுதியில் மூதாட்டி ஒருவரை காணவில்லை என யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொக்குவில் – தலையாழி – சேர் பொன்னம்பலம் வீதியில் வசித்துவந்த கந்தையா தனபாக்கியம் (வயது – 65) என்ற மூதாட்டியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவரது மருமகளினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இரத்தினபுரி – பாலங்கொடை – ரக்வானை பிதேசத்தை சேர்ந்த இவர் கடந்த வாரமே தனது மருமகள் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

நேற்று மாலை வேளை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அவரைத் தேடியபோது, காணாத நிலையில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், இவரைக் கண்டால் 0755305587 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு அவரது உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.