முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் இறுதி கிரியைகள்

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது மாளிகைக்காடு பகுதிகளில் லுகர் தொழுகையை தொடர்ந்து அங்குள்ள பொது நிறுவனங்கள் கடைகள் முற்றாக மூடப்பட்டு வெள்ளக்கொடி பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றதுடன் முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மறைவு எமது பிராந்தியத்திற்கு பாரிய இழப்பாகும் என சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவர் எம்.எம்.முபாரக் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று சனிக்கிழமை அதிகாலை மரணமடைந்த அவர் மரணிக்கும்போது 71 வயதாகும்.

ற்போது முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் ஜனாஸா தற்போது கொழும்பு கிருலப்பனையில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது .அத்துடன் இன்று இஷா தொழுகையின் பின்னர் தெஹிவளை ஜும்மா பெரிய பள்ளிவாயலில் தொழுவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் முன்னணி வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிலையமான மைஓன் குருப் (Myown Group) நிறுவனத்தின் ஸ்தாபக தலைவரும், தொழிலதிபருமான மீராமொஹிடீன் முஹம்மட் முஸ்தபா 1952 ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் திகதி பிறந்தார்கள்.

ஒரு கணக்காளரான இவர், 1994 – 1999 காலப் பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக அரசியலுக்குள் பிரவேசித்தார். அதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தார்.

2001 – 2004 மற்றும் 2004 – 2010 காலப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், 2007 – 2010 காலப் பகுதியில் உயர் கல்வி பிரதியமைச்சராக கடமையாற்றியிருந்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சுயாதீன வேட்பாளராக களமிறங்கினார்.
மைஓவ்ன் கெம்பியூட்டர் (MYOWN Computer) எனும் கல்வி நிறுவனத்தை நடாத்தி வந்த இவர், அம்பாறை மாவட்டத்தின் கல்வி, சமூக, சமய விடயங்களில் மக்களுக்கு பாரிய சேவைகளை மேற்கொண்டிருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரான இவர் அண்மையில் நாடு பூராகவும் கட்சி புணரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் சம்மாந்துறை மற்றும் கல்முனை தொகுதியிலும் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க ஆலோசனையில் பிராந்தியத்தில் கட்சியை பலப்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் கட்சிக்கான ஆதரவு கோரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 1999 ஆண்டுகளில் தனியொரு மனிதனாக நாட்டின் தேசிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணிலுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்து இணைந்து அம்பாரை கரையோர பிரதேசமெங்கும் பாரிய பங்களிப்பை வழங்கி ஐக்கிய தேசிய கட்சிக்கு எழுச்சியை உருவாக்கியவர் மயோன் முஸ்தபா என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் இறுதி கிரியைகள்

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் இறுதி கிரியைகள்

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் இறுதி கிரியைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்