முகக் கவசத்தை அகற்றுவது குறித்த தீர்மானம்
கொரோனாவைத் தடுக்கும் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை, 80 சதவீதத்தை தாண்டிச் சென்றால் மாத்திரமே, முகக் கவசத்தை அகற்றுவது குறித்து தீர்மானிக்க முடியும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும் அவ்வாறான நிலை ஏற்படும் வரை, முகக் கவசத்தை அகற்றுவது குறித்து எத்தீர்மானமும் எடுக்கப்படாது என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் 3 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 54 சதவீதமாகவே காணப்படுகிறது என தெரிவித்துள்ள அவர், இந்த எண்ணிக்கை தொடர்பில் எம்மால் திருப்திபட முடியாது என்றார்.
மேலும் எந்ததெந்த பொது இடங்களுக்கு தடுப்பூசி அட்டையை கொண்டு செல்ல வேண்டும் என்பதை எதிர்வரும் நாள்களில் வர்த்தமானி ஊடாக அறிவிப்பதாகத் தெரிவித்த அவர், ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு செல்ல வேண்டுமாயின் இலங்கையர்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருப்பது அவசியம் என்றார்.