மீனவர்கள் தொடர்பான இலங்கை – இந்திய இணைக்குழுவின் 5வது கூட்டம்

மீனவர்கள் தொடர்பான இலங்கை – இந்திய இணைக்குழுவின் 5வது கூட்டம் தொலைகாணொளி ஊடாக நேற்று இடம்பெற்றுள்ளது.

கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் இந்திய மீன்பிடி அமைச்சின் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற இறுதி கலந்துரையாடலை அடுத்து ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

மீன்பிடி படகுகளை தடுக்கும் போது எந்தவித உயிரிழப்பும் ஏற்படாத வகையில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு சம்பந்தப்பட்ட இலங்கை அதிகாரிகளை இந்திய தரப்பு கோரியுள்ளது.

அத்துடன் மனிதாபிமான அணுகுமுறையின் அடிப்படையில் மீன்படி பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இந்திய தரப்பினர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரு நாட்டு மீனவர்களினதும் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு என்பன குறித்து இருதரப்பும் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.