மிரிஹான சம்பவத்தில் கைதான 22 பேருக்கு பிணை

நுகேகொடை – மிரிஹானை பகுதியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 22 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை கங்கொடவில நீதிவான் முன் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்படவுள்ள 6 பேரும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.