மின்சார வேலியில் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு!

-பதுளை நிருபர்-
ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில், மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக, ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
உடகம தீகல்ல ஹாலிஎல பகுதியை சேர்ந்த, 60 வயதுடைய நபர், தனது மரக்கறி தோட்டத்தில் பயிர்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த  மின்சார வேலியில் சிக்குண்டே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்