மாற்றுவலுவுள்ள ஒருவரால் நிர்வகிக்கப்பட்ட வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பு

-யாழ் நிருபர்-

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பாலிநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 04.00 மணியளவில் வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மாற்றுவலுவுள்ள ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வந்த வர்த்தக நிலையமே இவ்வாறு இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் குறித்த வர்த்தக நிலையத்தில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் முன்னெடுத்து இருந்த வேளைஇ குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மல்லாவி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்