மழையில் நனைந்தபடியே சமல் ராஜபக்ஷவின் வீட்டை சுற்றிவளைத்த மக்கள்
திஸ்ஸமஹாராமவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் வீட்டை இன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படிஇ சமல் ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் வீதி அடைக்கப்பட்டு யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
எங்களுடைய நடைபயணத்தை பொலிஸாரின் தடுப்பு வேலிகளால் தடுத்து நிறுத்த முடியாது என்றும், ராஜபக்ஷக்கள் உட்பட இந்த நாட்டை சீரழிக்கும் எந்தவொரு அரசியல்வாதிகளையும் காவல்துறையினர் நீண்ட நாள் மறைத்து வைக்க முடியாது எனவும் பெருமளவான மக்கள் மழையில் நனைந்தபடியே சமல் ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடாத்தி வருகின்றனர்.
சமல் ராஜபக்ஷவின் வீட்டை சுற்றி ஏற்கனவே பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.