மருத்துவபீட மாணவர் ஒருவரது மடிக்கணினி திருட்டு
-யாழ் நிருபர்-
யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர் ஒருவரது மடிக்கணினி நேற்று வெள்ளிக்கிழமை திருடப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் திருநெல்வேலி பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்து யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகின்றார்.
மாணவன் தனது மடிக்கணினியை ஜன்னலின் அருகே வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில் அங்கு நுழைந்த திருடர்கள் அவரது மடிக்கணினியினை திருடிச் சென்றுள்ளனர்.
தனது கல்வி சம்பந்தமான பதிவுகள் அனைத்தும் அந்த மடிக்கணினியிலேயே இருப்பதாக குறித்த மாணவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.