மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இடம் பெற்ற புனித வியாழன் திருப்பலி

-மன்னார் நிருபர்-

புனித வியாழன் திருப்பலி மற்றும் ஆராதனை இன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் ஆலய பங்குதந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இதன் போது இறைவார்த்தை வழிபாடு, பாதம் கழுவும் சடங்கு, நற்கருணை வழிபாடு, நற்கருணை இட மாற்று பவனி ஆகியவை இடம் பெற்றது.

இதன் போது குறித்த கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.