மன்னாரில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்-

மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மன்னார் நீதிமன்றத்தில் கடமையாற்றுகின்ற சட்டத்தரணிகள் மன்னார் நீதிமன்றத்தின் முன் ஒன்று கூடி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது ‘கவிழ்ப்போம் கவிழ்ப்போம் குடும்ப ஆட்சியை கவிழ்ப்போம்’, அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீரழித்தது போதும் ஓடிவிடு கோட்டா, போலி முகம் காட்டும் கோட்ட அரசு எமக்கு வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு மன்னார் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.