மதுபானசாலை வேண்டாம் சிறுவர்கள் போராட்டம்!

நுவரெலியா – டயகம பகுதியில் புதிதாக மதுபானசாலையை திறக்க வேண்டாம் என கோரியும் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் டயகம நகரைச் சேர்ந்த சிறுவர்கள் குழுவொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகரில் மூன்று மதுபானசாலைகள் உள்ள நிலையில்இ மற்றுமொரு புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த மதுபானசாலையை திறக்கக்கூடாது என கோரி சிறுவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து டயகம நகரில் திரண்ட சிறுவர்கள் சுவரொட்டிகளையும்இ பதாகைகளையும் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டயகம நகரிலும் அதனை அண்மித்த தோட்ட தொழிலாளர்களும் இந்த மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்