மட்டு.கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய நிருவாகத்தின் முன்மாதிரியான செயல்

 

ஆலயத் திருவிழாக்களின் போது  வெளிவீதியில் அமைக்கப்படும் கடைகளுக்கான ஏல விற்பனைக்கு முடிவு கட்டி கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றிஸ்வரர் பேராலய நிருவாகமானது இவ் வருடம் முற்றுமுழுதாக ஏலம் அற்றதாக கட்டுப்பாட்டு விலையோடு கடைகளை வியாபாரிகளுக்கு பகிர்ந்தளித்து வியாபாரிகளுக்கும் பக்தர்களுக்கும் பெரும் உபகாரத்தை செய்து ஏனைய ஆலயங்களுக்கு முன்மாதிரியான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது.

திருவிழாக் காலங்களில் ஆலய வளாகத்தில் கடைகள் அமைப்பதற்கான நிலத்தினை போட்டி போட்டு முன்டியடித்துக்கொண்டு பெருந்தொகை நிதியினை கொடுத்து  வாடகைக்கு எடுத்துக்கொண்டு,  ஆலயத்திற்கு வரும் பக்தர்களிடம் அதிகமான விலைகளுக்கு பொருட்கள் விற்பனை செய்து ஆலய தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் அசௌகரியங்களை தடுக்கும் நோக்கில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய நிருவாகம் இச் செயற்ப்பாட்டை முன்னெடுத்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்