மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலய சங்காபிஷேக பெருவிழா

மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த சகஸ்ரநாம 1008 சங்காபிஷேக பெருவிழா, பால்குடப்பவனி 2025

19/05/2025 திங்கள்கிழமை பாலீஸ்வரப்பெருமானுக்கு 1008 சங்குகளாலும் , பாலாம்பிகை அம்பாளுக்கு 108 சங்குகளாலும் சங்காபிஷேக பெருவிழாவும் பால்குடப்பவனி நிகழ்வும் இடம்பெறும்.

பால்குடப்பவனி நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பிய அடியவர்கள் முன்கூட்டியே தங்கள் பெயர் விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு ஆலய நிருவாக சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்

எனவே கிழக்கிலங்கை வாழ் சகல பக்த அடியவர்கள் அனைவரையும் வருக வருக வருக என அன்புடன் அழைக்கின்றனர்