மட்டக்களப்பு குருக்கள் மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் வருடப்பிறப்பு விசேட பூஜை வழிபாடுகள்

விசுவாவசு வருட தமிழ் சித்திரைப் புதுவருட விசேட பூஜை வழிபாடுகள் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு குருக்கள் மடம் அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்களின் பங்கேற்றலுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட கிரியை வழிபாடுகளை தொடர்ந்து, சம்பிரதாய பூர்வமாக மருத்து நீர் எம் பெருமானுக்கும், அடியவர்களுக்கும் நள்ளிரவு வைக்கப்பட்டு, விசேட அபிசேக பூஜை வழிபாடுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இப் பூஜை வழிபாடுகள் யாவும் ஆலய பிரதம குரு சிவ.நா.சோமேஸ்வரம் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

 

  • Beta

Beta feature

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க