மட்டக்களப்பு – கல்லடி பாலத்திலிருந்து குதித்த பெண்

மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து பெண்ணொருவர் ஆற்றில் குதித்துள்ளார்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி டச்பார் பகுதியை சேர்ந்த செபமாலை (52 வயது) என்பவரே இவ்வாறு பாலத்திலிருந்து ஆற்றில் குதித்துள்ளார்.

கல்லடி பாலத்திலிருந்து அவர் அணிந்திருந்த காலணியை மீட்டுள்ள அவரது உறவினர்கள் குறித்த பெண் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளனர்.

குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஆற்றில் குதித்த பெண்ணை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்