மக்கள் அதிகளவாக கூடும் பகுதி ஆபத்தான நிலையில்

கல்முனைக்குடி பொதுச்சந்தைக்கு அருகில் அமைந்துள்ள பொதுச்சந்தைக்கு மேலாக காணப்படும் மின்சார மற்றும் தொலைபேசி வயர்கள் ஆபத்தை விளைவிக்கும் நிலையில் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கல்முனைக்குடி பொதுச்சந்தையின் பிரதான வீதியில் காணப்படும் ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் இலங்கை மின்சார சபையின் வயர்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்து காணப்படுவதுடன் அறுந்து கீழே விழுந்துள்ளது.

தற்போது மழை பெய்து நிலையில் மின்ஒழுக்கு ஏற்பட்டால் இப்பகுதியில் உயிரி சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் உள்ள சந்தைக்கு அதிகளவான மக்கள் வருவதால் இவ்விடயம் மக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்