மகள் மீது தந்தை அசிட் வீச்சு : தந்தையும் மகளும் வைத்தியசாலையில் அனுமதி

மகள் மீது தந்தை அசிட் வீச்சு : தந்தையும் மகளும் வைத்தியசாலையில் அனுமதி

தனது மகள் மீது அசிட் வீச முயற்சித்த 52 வயதுடைய நபர் ஒருவர் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை மாவட்டம் புலத்சிங்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும், இரண்டு பிள்ளைகளின் தாயான தனது மகள் மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் 25 வயதுடைய மகளும் அசிட் வீச்சில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர் எனவும், தாக்குதலை நடத்துவதற்காக தொழிற்சாலையிலிருந்து ஆசிட் திருடப்பட்டிருக்கலாம் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்