மகள்களை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய தந்தை கைது

யாழ்ப்பாணத்தில் மாற்று திறனாளிகளான இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியது தொடர்பில் அவர்களது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

மாற்று திறனாளிகளான 11 மற்றும் 8 வயது சிறுமிகளே இவ்வாறு தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாற்று திறனாளிகளான சிறுமிகளின் நடத்தைகளில் மாற்றம் தென்பட்டதை அடுத்து பாடசாலை ஆசிரியர்களால் மருத்துவ பரிசோதனைக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதன்போது குறித்த சிறுமிகள் அவர்களது தந்தையால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

சிறுமிகள் பாடசாலையில் தங்கி கற்று வருகின்ற நிலையில் விடுமுறையில் வீடு சென்ற போதே இவர்கள் இவ்வாறு தந்தையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தாய் கூலி வேலைக்கு செல்பவர் என்றும் அவர் காலையில் சென்றால் இரவே வீடு திரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்