மகன் தாக்கியதில் தந்தை பலி : தாய் படுகாயம்
மகன் ஒருவர் தாக்கியதில் அவரது தந்தை உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயமடைந்துள்ளார்.
கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில் வாகனபுரம் கொழுந்து புலம்பு பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நபர் ஒருவருக்கும் அவரது பெற்றோருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் மகன் பெற்றோரை தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான பெற்றோரை தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த நபரின் தந்தை உயிரிழந்துள்ளார்.
தாயார் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பிச்சைமுத்து இராமசாமி (வயது 64) என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பிரேத பரிசாதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்