போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

-பதுளை நிருபர்-

பதுளை ஹிகுருகமுவ பகுதியில் போதைப் மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பதுளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை ரில்பொல மற்றும் ஹிகுருகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 19 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் போதை மாத்திரை விற்பனை செய்து வருவதாக பதுளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது குறித்த சந்தேக நபர்கள் 10 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.