பொலிஸாருக்கு ரோஜா பூ கொடுக்க முற்பட்ட பெண்

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் கம்பி வேலிக்கு அருகில் சென்ற, பெண்ணொருவர் சிவப்பு நிறத்திலான ரோஜா பூவை, கம்பிவேலிக்கு அப்பால் நின்றிருந்த பொலிஸாரிடம் கொடுத்தார்.

பொலிஸார் எவருமே வாங்கவில்லை. எனினும், ‘வாங்கிக்கொள்ளுங்கள், உங்களுடைய பிள்ளைகளும் இதேபோன்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஈடுபடலாம், பரவாயில்லை வாங்கிக்கொள்ளுங்கள்’ என அப்பெண் கூறியுள்ளார்.

அதன்பின்னர், சீருடையில் இருந்த பொலிஸார் ஒருவர் வாங்கிக்கொண்டார். ரோஜாவை கொடுத்த அப்பெண், திரும்பி வந்துவிட்டார்.

இரும்பு வேலிகளை உடைத்துக்கொண்டு முன்னேறி செல்லமுடியாத வகையில், இறுக்கப்பட்டிருந்தன. பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலியும் இவ்வாறே அமைக்கப்பட்டிருந்தமையு; குறிப்பிடத்தக்கது.