பொலிஸாருக்கு சன்மானம்

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், பொலிஸ் அதிகாரிகளின் சேவைக்காக 2,500 ரூபா சன்மானம் வழங்குவதற்கு பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன தீர்மானித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.