பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமையே தாக்குதலிற்கான காரணம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் பலர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் குற்றவியல் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைக்கு சென்ற தடய மற்றும் தொழில்நுட்ப பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமையினாலேயே, போராட்ட காரர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க