பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்

புத்தாண்டு காலத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்குச் செல்லும்போது பணப்பை கொள்ளையர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்பு கருதி வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சிவில் உடையில் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கு போக்குவரத்து உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்