பொசன் தினத்தையொட்டி பாண் அன்னதானம் பொலிஸாரினால் வழங்கி வைப்பு

 

-மன்னார் நிருபர்-

 

மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் மன்னார் பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த பொசன் பாண் அன்னதானம் மற்றும் தாக சாந்தி வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் ஏற்பாடு செய்த பொசன் பாண் அன்னதானம் வழங்கும் நிகழ்வு காலை 11 மணியளவில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் முன் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வை மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.வை.எஸ்.ஏ.சந்திரபால வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

.இதன் போது உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத்,  மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி பிரசாந் ஜெயதிலக்க மற்றும் பொலிஸார் கலந்து கொண்டனர்.

இதன் போது பொசன் தினத்தையொட்டி பாண் அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தொடர்ந்து மன்னார் தலைமையக பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த தாகசாந்தி வழங்கும் நிகழ்வு பொலிஸ் நிலையத்திற்கு முன் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்