பைகளின் விலை அதிகரிப்பு

அனைத்து வகையான பைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாடசாலை பைகள், தொழிலுக்கு கொண்டுசெல்லும் பைகள், வெளிநாட்டு பயணப் பைகள் உள்ளிட்ட அனைத்து பைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு பைகள் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் பற்றாக்குறை மற்றும் அவற்றின் விலைகள் அதிகரித்தமையும், இந்த விலை அதிகரிப்புக்கு காரணமாகும், என உள்ளளூர் பைகள் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இறக்குமதிப் பொருட்களுக்கான வரியை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துடன், தற்போது அதிக விலையில் காணப்படும் பைகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என பைகள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னர் 450 ரூபாவாக காணப்பட்ட சிறிய பைகள் தற்போது 950 ரூபாவாகவும், 700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பைகள் தற்போது, 1,400 ரூபாவாக அதிகரித்துள்ளன.