
பேருவளை பகுதியில் வீதிக்கிறங்கிய மக்கள்
பேருவளை பகுதியிலும் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு கோரியும், மின் தடைக்கு தீர்வு கோரியும் பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக பேருவளை நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், ஆர்ப்பாட்டம் காரணமாக ஒரு வழிப் போக்குவரத்தாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.