பேருந்திலிருந்து கீழே விழுந்து பெண்ணொருவர் படுகாயம்

-பதுளை நிருபர்-

பதுளை பேருந்து நிலையத்திலிருந்து அம்பாறை நோக்கி காலை 5.00 மணிக்கு புறப்பட்ட மொனராகலை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் இருந்து பசறை 10 ம் கட்டைப் பகுதியில் வைத்து பசறை மௌசாகலைப் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவர் பேருந்தை நிறுத்துவதற்கு முன் தவறுதலாக கீழே விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின் உடனடியாக மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியச்லையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டூசிகிச்சை பெற்று வருவதோடு பேருந்தின் சாரதி பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.