பெண் கழுத்தறுத்து கொலை

மிஹிந்தலை கள்ளஞ்சிய பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொல்லப்பட்டுள்ளார்.

மகா கனதரவ என்ற பிரதேசத்தில் வசித்து வந்த டி.பி.சந்திராவதி ( வயது – 63 ) என்ற பெண்ணொருவரே இவ்வாறு கழுத்து அறுத்து கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வீட்டின் சமையலறை பகுதியில் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து நேற்று திங்கட்கிழமை கொலை செய்யப்பட்டுள்ளார்.

நீதவான் விசாரணையும் பிரேத பரிசோதனையும் இன்று  இடம்பெறவுள்ளதாக கள்ளஞ்சிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்